Wednesday, January 7, 2009

ஓர் தாயென விரிந்தானுக்கு வெளியென விரியும் நொடியிடைப் பொழுதுகள்


மதுசூதனனின் குழலிருந்து விரியும் அமுதநாதமாய்
வெளியெங்கும் விரிந்து
மானுடம் உய்நெறிகளை உய்தறிந்து, வகுந்து
வழிகாட்டும் ஒரு பார்த்தசாரதியாய் பரிணமித்து
விஜயனுக்கு மட்டுமன்றி எண்ணில் பல
ஏகலைவர்களுக்கு மாசில் துரோனராய்
என்றும் எம்முயிர்நிலையிடைவாழும்
எம் அன்ப!இன்று எமைக்காக்கும் நிலைக்கு உயிராகினாயோ!

அன்ப!
நீர் மறைந்ததாகச் சுவடுகள் இங்கில்லை.
நீர் எம்மிடை மலர்ந்ததாய் - நிறைந்ததாய்-
எம் வெளிகளில் விரியும் பல பொழுதுகள் உள.

நன்ப!
உன் நினைவெளியிடைக் கரைகிறோம்- பூரணமாய்
உன் அன்புவெளியிடைத் தோய்கிறோம்- பரிபூரணமாய்
உன் காலவெளியிடை எமை ரட்சிப்பாய்- சம்பூரணமாய்

No comments: