மனிதனின் இரகசியம் – பிறப்பின் முன் , இறப்பின் பின் என நீள்வெளிகளை பிரசவித்து, வாழ்வின் போதான பல மாயைகளின் ஊடாக எண்ணிறைந்த பிம்பங்களை கொண்ட வலைகளைப்பின்னி அதில் சிக்குவதில் ஒரு சுகம் எனும் ஒரு லோகமாயையை உருவாக்கி சிதம்பர இரகசியாமாய் வியாபிக்கையில்…………..
டும்டும் டுமக்க டும்டும் டுமக்க
காலமாய் எழுகிறான் ஆடல்வல்லான்.
காலமே சடமாய் எழுகிறது.
காலமே நாதமாய் விரிகிறது.
காலத்தில் காலத்தின் நர்த்தனம்
காலமே காலியாய் விரிகிறது.
---------------------------------------
"மன்மதன்", "மன்னி மாமா"
இந்த பெயர்கள் எங்களில் பல அதிர்வுகளை வெவ்வேறு தளங்களில் நிகழ்த்துகின்றன.
ஒரு உண்மையை உரைக்கும் நகைச்சுவையாளன்
ஒரு உறவுகளை உயிர்ப்பிக்கும் நடைமுறையாளன்
ஒரு பழமைகளில் உள்ள புதுமைகளைப் போற்றும் உணர்வாளன்.
ஒரு புதுமைகளில் உள்ள அபத்தங்களை நிராகரிக்கும் நியாயவான்
காலமாய் உறவாடினால் தான் உறவுகள்
உள்ளிருக்கும் உறவினைப் புரிந்து கொள்ளமுடியும்
என்பதை தன் வாழ்நாள் பரிசோதனையாக்கிய மானிடவாதி.
“ஈரான் மன்னர் ஷா”
“ ஈய பாஜ்”
“ எக்குளாய் பனஸ்பாஹாய்”
“ பற்குணன்”
இவையெல்லாம் இவன் மற்றவர்களுக்குச் சூடிய செல்லப்பெயர்கள்.
இவை ஒவ்வொன்றும் இக்கதைசொல்லியின் கதைசொல்லும்.
“ஆச்சி!!!!!!!!!!!!!!!!!!!!! நீ ஒரு கெட்டிக்காரி ஆச்சி!!”
“அப்பு !!!!!!!!!!!!!!!!!!!!! நீ வெட்டி ஆடிட்ட”
" அவன் கெட்டிக்காரன். வெட்டி ஆடுவான்"
உன் பாராட்டுகள் காலவெளிகளில்
உன் கதைகளைச் சொல்லித்திரியும்.
கோபம்
உன்னைப் பிறர் ஏளனம் செய்யும் போது வருவதில்லை
உன் உறவுகளை பிறர் ஏளனம் செய்யும் போது வரும்.
உன் நினைவுகள் காலவெளியெங்கும் கதைசொல்லி ஒருபோதும் ஓயாது.
உன் புன்னகை வதனம்
உன் துள்ளல் நடை.
உன் எள்ளல் நகைச்சுவை
ஒருபோதும் மறவேன் சித்தப்பா……….
என் ‘சித்து’ அப்பா……………..
காலமாய்க் கரைந்த கதைசொல்லியே
நீயே
உன் கதையை
காலமாய் செதுக்குகிறாய்.
நீ
செதுக்கையில்
No comments:
Post a Comment